நடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். இப்படமானது, இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராக்கெட்ரி படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா பத்திரிகையாளராக கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.