Rocketry

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘ராக்கெட்ரி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும், இப்படம் மூலமாக மாதவன் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். சூர்யா மற்றும் ஷாருக்கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரானது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலுமே இந்த ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

Advertisment