RC15

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், அரங்குகள் அமைப்பது உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தற்போதுவரை முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (08.09.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பைதொடங்கிவைத்தார். இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment