Skip to main content

‘கே.ஜி.எஃப்.’ பாணியில் டீசரை வெளியிடும் பிரபாஸ் படக்குழு! 

 

RadheShyam

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

 

இப்படம் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு இன்று (20.10.2021) வெளியிட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி நடிகர் பிரபாஸ் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அன்றைய தினத்திலேயே ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடுகிறது.

 

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, ‘ராதே ஷ்யாம்’ டீசர் நேரடியாக ஆங்கில மொழியில் வெளியிடப்படும் என்றும், ரசிகர்கள் இந்திய மொழிகளின் சப் டைட்டிலுடன் அதனைக் கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படக்குழு இதே பாணியில் டீசரை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மிஸ் பண்ணிடாதீங்க