/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raai_0.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில்சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியகோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை த்ரிஷா, அமலா பால் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகை ராய் லட்சுமிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தராய் லட்சுமி, கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)