Skip to main content

பாடகரை கொலை செய்தபின் துப்பாக்கியுடன் கொண்டாட்டம்; வெளியான அதிர்ச்சி வீடியோ

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

punjabi singer sidhu moose wala incident video goes viral

 

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

 

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பஞ்சாப் போலீஸ் சித்து மூஸ் வாலா கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ப்ரியவாத், சச்சின்  பவானி, தீபக், கபில் உள்ளிட்ட நான்கு பேரை அதிரடியாக கைது செய்தது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட  அங்கித் சிர்ஸா தப்பிய நிலையில் நேற்று(3.7.2022) முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏகப்பட்ட துப்பாக்கிகள், மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்நிலையில்  பாடகர் சித்து மூஸ் வாலாவை கொலை செய்த பிறகு கொலையாளிகள் துப்பாக்கியுடன் காரில் பயணித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சித்து மூஸ் வாலாவை கொன்ற பிறகு அவரது மரணத்தை கொண்டாடும் வகையில் உள்ள இந்த வீடியோவை கொலையாளிகளில் ஒருவர் தனது போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.