கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் 29/10/2021 அன்றுதிடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளை பெற்றதோடு, சமுதாயத்திலும் கண் தானம், ஏழைகளுக்கு உதவுதல், இலவசபள்ளிக்கூடம், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என அவரின் செயலால் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வருகிறார்.திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாகமைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்குகர்நாடக ரத்னா வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளானநவம்பர் 1 ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்குவிருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்தவுள்ளது. அவரின் சார்பாக அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் பெற்றுக்கொள்வார்எனத் தெரிகிறது.