puneeth rajkumar starring james movie poster viral on social media

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத்திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில்தான் அவர் உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் போஸ்டரைபடக்குழு குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (26.1.2022) வெளியிட்டது. அதில் மறைந்த புனித் ராஜ்குமார் ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் தோன்றியுள்ளார். அவர் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் என்பதால் ரசிகர்கள் மறைந்த புனித் ராஜ்குமார் பேனர்களுக்கு மாலை அணிவித்து,பால் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து மறைந்த புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினருடன், ரசிகர்கள் பலரும் இணைந்து சிறப்பு பூஜை நடத்தியது குறிப்பிடத்தக்கது.