Skip to main content

"அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வோம்" - நடிகர் பிரஷாந்த் கவலை!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

ggdsgs

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்று வரும் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் விரைவில் குணமாக வேண்டி பலரும் பிரார்த்தனை செய்துவரும் நிலையில், நடிகர் பிரஷாந்த் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...


"பொதுமக்களின் கவலைகளை வெளிப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜென்டில்மேன் டிராஃபிக் ராமசாமி, இப்போது தனது உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். அனைவரும் அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வோம்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் பிரஷாந்த் திடீர் சந்திப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
prashanth meets thirumavalavan

பிரஷாந்த், தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும்  ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை கைவசம் வைத்துள்ளார். நீண்ட காலமாக உருவாகி வரும் படம் விரைவில் வெளியிடவுள்ளதாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். 

சமீப காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அன்மையில் கூட நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிலையில், பிரஷாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி-யை சந்தித்துள்ளார். 

Next Story

“அதுக்கு நிறைய தைரியம் வேண்டும்” - விஜய் குறித்து பிரசாந்த்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prashanth about vijay

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரசாந்த் கலந்து கொண்டார். அதில் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அவர் பேசுகையில், “தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பார்கள். என்னை பொறுத்தவரை அது உயிரைத் தாண்டி ஒரு குடும்பத்தை காக்கும் கவசம். இன்றைக்கு நடக்கும் நிறைய விபத்துகளில் உயிர் பலியாவது தலைக்கவசம் அணியாதது தான் காரணம் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதனால் மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி வருகிறேன். அதன் மூலம் ஒருத்தர் உயிர் காப்பாற்றப்பட்டாலும் எனக்கு பெருமைதான்” என்றார்.  

அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசிய அவர், “அந்தணன் படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் சாருடன் சேர்ந்து ஒரு படம் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மூன்று புது ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதிலும் நடிக்க போறேன். விஜய்யுடன் நடிக்கும் படம் சூப்பரா போயிட்டு இருக்கு. உங்க எதிர்பார்ப்புக்கு மேல் அந்த படம் இருக்கும்” என்றார். 

மேலும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், “விஜய்யை என்னுடைய சகோதரர் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி உண்மையிலே உழைப்பும், கடமைகளும் நிறைந்தது. அது விஜய் சார்கிட்ட இருக்கு. அதை நான் வாழ்த்துகிறேன்.  எனக்கு அது ரொம்ப கஷ்டம். அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். அவர் இறங்கியிருக்கிறார், வாழ்த்துகள்” என்றார்.