/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_21.jpg)
‘கே.ஜி.எஃப்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் பிரசாந்த் நீல்,பிரபல தெலுங்கு நடிகர்ஜூனியர் என்.டி.ஆரை நாயகனாக வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்துவருகிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தினை முடித்துவிட்டு, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல்படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இணைவது குறித்து தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் நீண்டநாட்களாகவே பேசப்பட்டுவந்தபோதிலும், இத்தகவல் உறுதிசெய்யப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படத்தினைப் போலவே ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இணையும் படமும் பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)