vijay

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார். ‘தளபதி 66’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்திற்கான முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் கடைசியாக விஜய்யுடன் இணைந்து ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 12 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் விஜய் - பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment