Published on 24/02/2021 | Edited on 24/02/2021
'மைனா', 'கும்கி' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் பிரபு சாலமன். இவர், தற்போது 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்.
அறிமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் 'அழகிய கண்ணே' படத்தில் பிரபு சாலமன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் மேனன், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், பிரபு சாலமனும் 'அழகிய கண்ணே' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.