Prabhu Deva

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முழுநீள ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை, ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

Advertisment

இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் கூறுகையில், ''பிரபுதேவா நடிப்பில் மாஸான முழுநீள ஆக்க்ஷன் படமாக இப்படம் தயாராகிறது. இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்குப் புதுமையானதாக இருக்கும்'' எனக் கூறினார்.

Advertisment