Skip to main content

பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக்கில் ரெஜினா - வெளியான ஃபர்ஸ்ட்லுக்

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

prabhu deva flashback movie first look poster released

 

சினிமா துறையில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத் திறமைகொண்ட பிரபு தேவா, தமிழில் ‘யங் மங் சங்’, ‘பஹிரா’, 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.   

 

இதையடுத்து நடிகர் பிரபு தேவா டான் சாண்டி எழுதி இயக்கும் 'ஃப்ளாஸ்பேக்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அனுஷ்யா பரத்வாஜ்  ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

ad

 

இந்நிலையில் ஃப்ளாஸ்பேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சைக்களில் செல்லும் ரெஜினாவை நின்று கொண்டு பார்க்கும் வகையில் நடிகர் பிரபு தேவா கோட்டு சூட்டுடன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.  தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் பிரபல நடிகர்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
prabhu deva stper hero movie minman

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நடனத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. ஆனால் சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபு தேவா. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் பிரபு தேவா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி கோட் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. 

prabhu deva stper hero movie minman

இந்த நிலையில் பிரபு தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை அறிவித்துள்ளது ஒரு படக்குழு. மின்மேன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கிறார். கதை மற்றும் இயக்கத்தை பிரவீன் மற்றும் சதீஷ் என்பவர்கள் கவனிக்க, வசனம் மற்றும் திரைக்கதையை மதன் கார்கி கவனிக்கிறார். வினோத் செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு கஷ்யப் இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.