/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/326_5.jpg)
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (04.07.2022) விக்ரம் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனைத்தொடர்ந்து தற்போது கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்-கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கார்த்தி, இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு தெரிவித்து, "ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்... இதோ வருகிறான் வந்தியத்தேவன்" என குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)