![parthiban](http://image.nakkheeran.in/cdn/farfuture/bThzeNaQH7jL-Ou-nloCW48r2ASUlF_fP8aMIavMylk/1652706245/sites/default/files/inline-images/30_29.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், "கமல்ஹாசனின் ரசிகன் என்ற ஒரே தகுதியோடு மட்டும்தான் நான் சினிமாவுக்குள் வந்தேன். விஜய்சேதுபதி, பகத் பாசில் எனப் பல நடிகர்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அப்படியான நடிகர்களைத்தான் கமலுக்கும் பிடிக்கும். ஆனால், அவர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொண்டு விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன். கேன்ஸ் திரைப்பட விழாவில் 'விக்ரம்' படத்தோடு என்னுடைய 'இரவின் நிழல்' படமும் திரையிடப்பட உள்ளது. இதே அரங்கில் ஜூன் 5ஆம் தேதி 'இரவின் நிழல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள்" எனக் கூறினார்.