Skip to main content

"காதல் என்பது அரசியல்" - அடுத்த சம்பவத்திற்கு ரெடியான பா.ரஞ்சித்

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

pa ranjith Natchathiram Nagargiradhu first look poster out now

 

'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெய்ராம் நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணியை எட்டியுள்ளது. 

 

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார். அத்துடன் "காதல் என்பது அரசியல்" என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பா. ரஞ்சித் தனது படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கருத்துக்கள் ஆழமாக முன்வைக்கப்படும். அந்த வகையில் இந்த படத்திலும் அப்படி ஒரு அரசியலைத்தான் காதலுடன் சேர்த்து சொல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இலக்கை அடைந்த தருணம்...” - துஷாரா விஜயன் பெருமிதம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
dhushara vijayan about raayan movie and dhanush

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவுப் படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளதாகப் படக்குழு அவர்களது கதாபாத்திர லுக் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு உறுதி செய்தது. இதையடுத்து பிரகாஷ் ராஜ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், துஷாரா விஜயன் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக துஷாரா விஜயன், “இந்த படம் எனக்கு ஒரு கிஃப்ட். கனவு நனவான தருணம் என்று சொல்வதை விட இலக்கை அடைந்த தருணமாகத்தான் நான் பார்க்கிறேன். தனுஷ் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் இயக்கத்தில் நடித்ததை தாண்டி அவருடன் நடிப்பதை கூடுதல் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.