Skip to main content

வடசென்னை பரம்பரைகளின் பின்னணி! 

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

sarpatta parambarai

 

தமிழ்ப் படங்களில் வெட்டு, குத்து, ரவுடியிசம் என்பன பொதுவாக வட சென்னையின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால், இதையும் தாண்டி வடசென்னையின் அடையாளங்களாக இருப்பவை ஏராளம். அதில் கேரம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள், தேசிய அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அதுபோல பாக்ஸிங்கிற்கும் அடையாளமாக இருக்கிறது வடசென்னை. தற்போது இந்த வரலாற்றை மையமாக வைத்துதான் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

 

அது என்ன பாக்ஸிங்கில் பரம்பரை என்று யோசிக்கிறீர்களா? தற்போது அதிகமாகப் பலரும் பயன்படுத்தும் க்ளப், அகாடமி என்கிற வார்த்தைக்குப் பதிலாக, அப்போது பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடித்தளத்தைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றும் கடமை அந்த க்ளப்பிற்கும் அகாடமிக்கிற்கும் இருக்கிறதோ, அந்தக் கடமைதான் இந்தப் பரம்பரைக்கும் இருந்திருக்கிறது. வடசென்னையை ஆக்கிரமித்த ஆக்ரோஷமான பாக்ஸர்களை உருவாக்கத் தொடங்கி, 80 வருட வரலாறு இதற்குப் பின்னால் இருக்கிறது. ஆனால், இந்த வரலாறு பலருக்கும் தெரியாது.

 

வடசென்னையில் இந்த 'சார்பட்டா பரம்பரை', காலப்போக்கில் 'சல்பேட்டா பரம்பரை' என்றானது. இதுமட்டுமல்லாமல் மேலும் பல பரம்பரைகள் வடசென்னையில் ஆக்ரோஷமாகப் பயிற்சியெடுத்து பாக்ஸிங் களத்தில் தனது குருதி கலந்த வியர்வையால் மேடையை நனைத்திருக்கிறது. 'சார்பட்டா பரம்பரை', 'இடியப்பன் நாயக்கர் பரம்பரை', 'எல்லப்பச் செட்டியார் பரம்பரை', 'கறியார பாபுபாய் பரம்பரை' இவையெல்லாம் குடும்பப் பரம்பரைகள் அல்ல. வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுத்த பயிற்சி மையங்கள். 

 

1940லிருந்து 1990 வரையில் வடசென்னை மக்களின் வாழ்வோடு ஒரு அங்கமாக இருந்திருக்கிறது பாக்சிங். வாரா வாரம் பொழுது போக்கிற்காகச் செல்லும் ரசிகனைப் போல, ஞாயிறு மாலை இந்த பப்ளிக் பாக்ஸிங்கை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திடலுக்கு வந்து கண்டு களித்துள்ளனர். இன்று வடசென்னையிலிருக்கும் நேரு ஸ்டேடியம், கண்ணப்பர் திடல் மற்றும் தண்டையார்பேட்டை மைதானம் போன்று, அன்றிருந்த பொட்டல் மைதானங்களில்தான் போட்டிகள் நடந்தன. மைதானத்தின் நாற்புறமும் தட்டிகள் கட்டி, நடுவில் வீரர்கள் மோதுவதற்கான மேடை அமைத்து, மேடையின் நாலு பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டு, பரபரப்பாக நடந்த போட்டி ஒவ்வொன்றும் பார்க்கும் மக்களுக்குக் கொண்டாட்டம்தான்.

 

ஒரு போட்டியை காண குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரசிகர்கள் வருவதுண்டு. பெண்கள் வருவதில்லை. இந்த ஆக்ரோஷப் போட்டிகளை நடத்துவதற்கு என்று அமைப்புகள் இருந்திருக்கின்றன. போட்டிகளில் பெறும் வெற்றியின் அடிப்படையில் வீரர்களுக்கு சம்பளம், தோல்வி பெற்றால் வீரரின் ரேட்டிங் குறைவது என்று முழுக்க முழுக்க புரொஃபஷனல் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. 

 

இந்தப் போட்டிகளை மக்கள் மட்டுமல்ல எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அப்போதைய உச்ச நட்சத்திரங்களும் வந்து பார்த்திருக்கிறார்கள். சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இந்தப் போட்டிகளை காண பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள். சார்பட்டா பரம்பரையும், இடும்பன் நாயக்கர் பரம்பரையும் மோதிக்கொள்வது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இந்த பாக்ஸிங்கில் விளையாடிய சிலர் ரவுடியிசத்திலும் ஈடுபட்டது, இந்த விளையாட்டிற்குப் பெரிய தலைவலியானது. களத்தில் தோல்வியடைந்தால், களத்திற்கு வெளியே அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வது போன்ற வன்முறையால் 1989ஆம் ஆண்டு இந்த ஆட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டது. 

 

cnc

 

இந்தப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே சில வீரர்கள் இறந்திருக்கின்றனர். சிலர், படுத்த படுக்கையாகி கோமா வரை சென்றுள்ளனர். பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட பாக்ஸிங், ஒரு கட்டத்தில் உச்ச கவனத்தைப் பெறும்போது வன்முறை, கலவரம், பகை என்று விளையாட்டை மீறிய ஒன்றாக மாறியதுதான் தடைக்கு முக்கிய காரணம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த வடசென்னையில் நடைபெற்ற பாக்ஸிங்கில் இருந்திருக்கிறது. 

 

உலகளவில் பெரும் தொகை பெரும் வீரர்களில் புரொஃபஷனல் பாக்ஸர்களும் இருக்கின்றனர். வன்முறை, ரவுடியிசம் இன்றி இந்த பாக்ஸிங் போட்டி விளையாட்டாகவே சென்றிருந்தால், வடசென்னையில் உருவான பல இளைஞர்கள் இன்று முகமது அலிகளாகவும், மைக் டைசன்களாகவும் வடசென்னையின் அடையாளமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் அடையாளங்களாகி, பல இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாகி இருப்பார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில் ஆர்யா

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
arya attend studio opening ceremony

ஓ.எம்.ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும் சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  'சீயான்' விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.