தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயபிரதா. இப்போது பா.ஜ.க-வில் இருக்கும் ஜெயபிரதா கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஜெயபிரதா தோல்வி கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.
ஜெயபிரதா அந்தத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்ட போது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார் என அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததுள்ளது. அப்போது ஜெயபிரதா நேரில் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.