Skip to main content

"படப்பிடிப்பின்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்" - நித்யா மேனன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

fjftjftn

 

அசோக் செல்வன், நித்யா மேனன், ரீத்து வர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீனி’. இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நாசர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வரும் 26ஆம் தேதி 'தீனி' படம் நேரடியாக ‘ஜீ ப்ளெக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து நடிகை நித்யா மேனன் கூறும்போது...

 

cccc

 

"இப்படம் நான் இதற்கு முன் நடித்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. ‘அலா மொதலைந்தி’ படத்தின்போது எப்படி நடிகர் நானி, இயக்குநர் நந்தினி ரெட்டி, நான் மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோமோ, அதேபோல் 'தீனி' படப்பிடிப்பின்போதும் நடிகர்கள் நாங்கள் நெருங்கிய நண்பர்களைப் போல இருந்தோம். இப்படம் பார்ப்பவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய ஜெயம் ரவி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Jayam Ravi gave priority to women in Kadhalikka Neramillai movie

 

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. படு தோல்வியை படம் சந்தித்தது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சைரன் படம் டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது. 

 

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்துள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.   

 

 

Next Story

‘காதலிக்க நேரமில்லை’ - ரொமான்ஸில் ஜெயம் ரவி

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

jayam ravi new movie update

 

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. படு தோல்வியை படம் சந்தித்தது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சைரன் படம் டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது. 

 

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் நித்யா மேனன் கதாநாயகியாக நடிப்பதாகவும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. தகவலில் கூறப்பட்டது போல அனைத்தும் தற்போது உறுதியாகியுள்ளது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கிறது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.