
அசோக் செல்வன், நித்யா மேனன், ரீத்து வர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீனி’. இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நாசர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வரும் 26ஆம் தேதி 'தீனி' படம் நேரடியாக ‘ஜீ ப்ளெக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து நடிகை நித்யா மேனன் கூறும்போது...
"இப்படம் நான் இதற்கு முன் நடித்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. ‘அலா மொதலைந்தி’ படத்தின்போது எப்படி நடிகர் நானி, இயக்குநர் நந்தினி ரெட்டி, நான் மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோமோ, அதேபோல் 'தீனி' படப்பிடிப்பின்போதும் நடிகர்கள் நாங்கள் நெருங்கிய நண்பர்களைப் போல இருந்தோம். இப்படம் பார்ப்பவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)