/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/418_6.jpg)
கெளதம்மேனன்இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'சில்லுனுஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 'ஏஜிஆர்' என்றகேங்ஸ்டர்கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக்,கெளதம்மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோக்ரீன்'ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ்ரீமேக்ஆகும்.
இப்படத்தின்இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்பு தற்போது தன் தந்தையின்மருத்துவச்சிகிச்சைக்காக அவரோடு அமெரிக்கா சென்றுள்ளார். அதனால் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில்சிம்புவால்கலந்து கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி 45 நாள் தொடர்ந்து நடத்தி ஆகஸ்ட் மாதத்திற்குள்முடிக்கப்படக்குழுதிட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் சிம்பு சம்மந்தப்பட்டகாட்சிகளைப்படமாகவுள்ளதாகவும், சிம்பு இதில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)