திரைத்துறையை ஊக்குவிக்கும் நோக்கோடு சிறந்த திரைப்படங்களுக்கும், சிறந்த திரைக்கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 67ஆவது தேசிய திரைப்பட விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படம் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாகத் தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. விருது வென்ற தமிழ்ப்படம் மற்றும் தமிழ் கலைஞர்களின் விவரம் பின்வருமாறு...
சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன்
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (அசுரன்)
சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)
சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)
சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு)
மேலும், சிறந்த நடிகைக்கான விருது மணிகர்ணிகா மற்றும் பங்கா படத்திற்காக கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த மலையாள படத்திற்கான விருதை மரக்காயர் திரைப்படம் வென்றது.