Published on 27/11/2021 | Edited on 27/11/2021
![murungakkai chips movie release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/pnFTv2rXcjMLCOu0qmnHFyn6FMWHdmitNiuqdRVuGoI/1638018964/sites/default/files/inline-images/Untitled-1_310.jpg)
அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா மற்றும் பாக்கியராஜ் நடித்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/mc1mNPboM2ExnLvuVA9S6rrwD_RvVhd1kb9GR4aHo0o/1638019023/sites/default/files/inline-images/article-inside-ad_75.jpg)
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.