Skip to main content

”வாய்ப்பு மட்டுமில்ல், இவர்தான் நியாயமான சம்பளமும் தருவார்” - ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ் பகிர்ந்த நினைவு

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

எஸ்.எஸ்.பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

muniskanth

 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது... "சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப உறுப்பினர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார். அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த் !

Published on 26/03/2018 | Edited on 27/03/2018
munishkanth


தமிழ் சினிமாவில் முண்டாசுப்பட்டி  படம் மூலம் முனிஸ்காந்த் என்று பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ராமதாஸ். அதன் பின் தனது பெயரை முனிஸ்காந்த் என மாற்றிக் கொண்ட அவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நகைச்சுவை காட்சிகளில் ரசிக்கும்படியாக நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் வெளிவந்த  ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, பசங்க 2, டார்லிங் 2, மாநகரம், மரகத நாணயம், வேலைக்காரன், குலேபகாவலி,  கலகலப்பு-2 உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் முனிஸ்காந்த்துக்கும்,தேன்மொழி என்பவருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைத்து இன்று திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இத்திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இவர் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.