Skip to main content

நடிகைகளுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை... சிக்கிய பிரபலம் !

Published on 26/05/2018 | Edited on 28/05/2018
morgan freeman


ஹாலிவுட்டில் சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி 80 நடிகைகளுக்கு மேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பிரச்னை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது புதியதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமேன் மீது 16 பெண்களுக்கு மேல் பாலியல் புகார் கூறி ஹாலிவுட்டை அதிர்ச்சி அடைய செய்துள்ளனர். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேல் தன் நடிப்பால் ஹாலிவுட்டில் கோலோச்சிவரும் மார்கன் ப்ரீமேன் கடந்த ஆண்டு வெளியான 'கோயிங் இன் ஸ்டைல்' படத்தில் தயாரிப்பு உதவியாளராக தான் பணியாற்றியபோது மார்கன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் கூறி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

 

 

 

மேலும் படத்தில் வேலை செய்த இன்னொரு பெண் கூறும்போது... 'படப்பிடிப்பு தளத்தில் என் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் தொட்டும் ஆபாச வார்த்தைகள் பேசியும் மார்கன் எனக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்   தற்போது 'நவ் யூ சீ மீ' படக்குழுவை சேர்ந்த இன்னொரு பெண்ணும்.... 'மார்கன் ப்ரீமேன் முன்னால் இறுக்கமான உடைகள் அணிந்து பெண்கள் சென்றால் பின் பக்கத்தில் தட்டி சில்மிஷம் செய்வார். இதனால் அவர் பக்கத்தில் செல்லவே பெண்கள் பயப்படுவார்கள்' என்று பகிரங்க புகார் கூறியுள்ளார்.இதுபோல் இன்னும் 16 பெண்களுக்கு மேல் பாலியல் புகார் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து வாய் திறந்த மார்கன் ப்ரீமேன் தற்போது அந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில்... "நான் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. என்னால் அசவுகரியத்துக்கு உள்ளான பெண்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று  பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.