/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/130_9.jpg)
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்.ஜி.ஆர். மகன்'. இப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட போதிலும், கரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்த படக்குழு, சில முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)