Skip to main content

ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
Man who cheated sixty thousand rupees saying actor Raghava Lawrence's assistant

ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’ , ‘ஹண்டர்’ மற்றும் இன்னும் பெயரிடாத படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த நிலையில் இவரது பெயரை பயன்படுத்தி பண மோசடி சம்பவம் நடந்துள்ளது. சென்னை எழும்பூரை சேர்ந்த வீர ராகவன், ரூ.60,௦௦௦க்கும் மேலாக பணத்தை இழந்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “என் மகள் படிப்பு செலவுக்கு உதவுமாறு இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்தேன். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் எனக் கூறி குழந்தையின் கல்வி செலவுக்காக உதவுகிறோம் என்றார். லாரன்ஸின் அறக்கட்டளையின் மூலம் உதவுவதாக சொன்ன அவர், அதற்கும் முதலில் ‘எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று ரூ.8,675 கேட்டார். அதனால் அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என ரூ.2875 கேட்டார். நானும் அந்த பணத்தை அனுப்பினேன். இதனைத் தொடர்ந்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு ‘ரூ.50,000 பணத்தை அனுப்பி வைத்தால் உங்கள் குழந்தையின் மொத்த படிப்பு செலவையும் எங்களின் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக கூறினார். அதையும் நம்பி ரூ.50,000 அனுப்பினேன். அதன் பிறகு மேலும் 30,000 கேட்டார். அப்போது எனக்கு சந்தேகம் வந்து, நான் கொடுத்த மொத்த பணத்தையும் திருப்பி கேட்டேன். அவர் தரமுடியாது என மிரட்டினார். எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

Man who cheated sixty thousand rupees saying actor Raghava Lawrence's assistant

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அந்த மர்ம நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்தனர். இதையடுத்து வேலூருக்கு சென்ற காவல் துறையினர் அந்த மர்ம நபரை கைது செய்தனர். பின்பு விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரிய வந்தது. பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.  

சார்ந்த செய்திகள்