Skip to main content

மகேஷ் பாபுவின்  தமிழ் டப்பிங் படம்... இத்தனை தியேட்டர்களா!

mahesh babu

 

 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில், இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் 'சரிலேரு  நீக்கெவரு'. இப்படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில், விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

 

தெலுங்கில் வெளியான இப்படம், பெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து, மலையாளத்தில் 'கிருஷ்ணன்' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'மேஜர் அஜய் கிருஷ்ணா' என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

 

இந்தநிலையில், 'சரிலேரு நீக்கெவரு' படம், 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' என்ற பெயரில், தமிழில்  டப் செய்யப்பட்டு இன்று வெளியாகிறது. கரோனாவிற்கு பாதிப்பிற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட நிலையில் இப்படம், தமிழகத்தில் 220 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

மிஸ் பண்ணிடாதீங்க

சார்ந்த செய்திகள்