madhavan

மலையாள படமான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அமேசான் ப்ரைமில் ‘மாறா’ என்ற தலைப்பில் வெளியாகிறது. ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுடன் நடித்த ஷரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் அவருடன் நடிக்கிறார்.

Advertisment

பாலிவுட் நடிகர் அமித் சாத் என்பவர் மாதவனுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தைதனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் ட்விட்டர் பயனர் ஒருவர் மாதவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்டில், “ஒரு காலத்தில் மாதவன் எனது இதயம் கவர்ந்த நடிகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் தன்னுடைய அற்புதமான சினிமா வாழ்க்கை, ஆரோக்கியம், வாழ்க்கை ஆகியவற்றை மது மற்றும் போதைப் பழக்கத்தால் அழித்துக்கொள்வதைப் பார்க்க நெருடலாக உள்ளது. பாலிவுட்டில் அவர் நுழைந்தபோது புதிதாக மலர்ந்த மலரைப் போல இருந்தார்.ஆனால் இப்போது அவரது கண்களையும், முகத்தையும் பாருங்கள். அவை அனைத்தையும் சொல்லும்’ என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்தக் கமெண்டிற்கு மாதவனே பதிலளித்துள்ளார். அதில், ‘ஓ.. இவற்றையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்தீர்களா? உங்கள் பெற்றோரை நினைத்து நான் கவலை கொள்கிறேன். நீங்கள் மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.