Skip to main content

தர்ஷனுடன் கைக்கோர்த்த லாஸ்லியா!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

tharshan

 

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணனுக்கு வழங்கியுள்ளார்.

 

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்க உள்ளார். மேலும், நடிகர் யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

 

இப்படத்தின் பணிகள் இன்று (28.01.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன. படப்பூஜையின்போது, தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அந்த ரோபோ ஆம்பளையா பொம்பளையா?" வைரலாகும் தர்ஷன் லாஸ்லியா இணைந்து நடித்த படத்தின் டீசர்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Koogle Kuttapa Teaser

 

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பைத் தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

 

தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்த தர்ஷன்-லாஸ்லியா படக்குழு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

tharshan

 

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

 

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.