இந்தியத் திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் கமல்ஹாசன், கிட்டத்தட்ட அனைத்து சினிமா துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் திரைத்துறையில் 63 ஆண்டுகளைக் கடந்து 64 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், "உலக நாயகன் மற்றும் சினிமாவை உயர்த்த அவரின் சோர்வில்லாத உழைப்புக்கிடையே எதுவொன்றாலும் நெருங்க முடியாது" என ட்விட்டரில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியும், ட்விட்டரில் கமலின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்தினார். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட கமல்ஹாசன், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இயக்குநரும் கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ், "எப்பொழுதும் கமல் சாருக்கு நன்றியுடையவன். 64 ஆண்டுக்கால ஈடு இணையற்ற உழைப்பால் உலகையே உயர்த்தியதற்காக உங்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Ever grateful to @ikamalhaasan sir, for bracing the world with 64 years of unparalleled work! We’re forever indebted to you aandavarey!❤️#64YearsOfKamalism https://t.co/gQ5PE5KU8F— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 12, 2023