/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/81_20.jpg)
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'கோடியில் ஒருவன்' திரைப்படம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெளியானது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் மாபெரும் வெற்றிபெற்றது. கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு திரையரங்கில் வெளியான ஒரு படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக ‘கோடியில் ஒருவன்’ பட வெற்றி அமைந்தது.
இந்த நிலையில், ‘கோடியில் ஒருவன்’ படத்தின் 25வது நாள் வெற்றியைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)