Skip to main content

'கே.ஜி.எஃப் 2 'ஓடிடி ரிலீஸ்; அமேசானின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

KGFChapter2 now available rent Amazon Prime Video

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃ ப் 2' படம் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது.

 

இந்நிலையில் 'கே.ஜி.எஃ ப் 2' படத்தின்  ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரூ.200 ரூபாய் செலுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் பார்த்துக்கொள்ளலாம். சில நாட்கள் கழித்து  அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் இந்த அறிவிப்பு  ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும் இது அமேசான் ப்ரைமில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

கங்குவா டூ கேம் சேஞ்சர் - பட்டியலை வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kanguva to game changer amazon prime ott announced his list

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதே போல் வெப் சீரிஸ்களுக்கும் படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் 2024ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கங்குவா - சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 

கேம் சேஞ்சர் - ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரிலீஸ் அப்டேட் நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சிட்டாடெல் - வெப் சீரிஸான இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டீகே இயக்கி வரும் இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும். இந்தியாவில் சிட்டாடல் ஹனி பனி என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 'கேங்க்ஸ்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றும் இந்த சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். 

சுழல் சீசன் 2 - ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தவிர்த்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி', அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், எனப் பல படங்களின் திரையரங்கிற்கு பின் வெளியாகும் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.