பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உலக அளவில் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்திய படங்களான பாகுபலி ஆர்.ஆர்.ஆர் படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'கே.ஜி.எஃ ப் 2' படம் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து 'கே.ஜி.எஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் 'கே.ஜி.எஃ ப் 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரூ.200 ரூபாய் செலுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் பார்த்துக்கொள்ளலாம். சில நாட்கள் கழித்து அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட படத்தை பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும் இது அமேசான் ப்ரைமில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
thrill ×2 | craziness ×2 | K.G.F ×2 💥#EarlyAccessOnPrime, rent now pic.twitter.com/FDtYdtro0l— amazon prime video IN (@PrimeVideoIN) May 16, 2022