
இயக்குநர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு, சென்ற மாதம் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர்,இயக்குநர் கண்ணன் இப்படம் குறித்து பேசியபோது....
"படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச்சரியாக நடைபெறுவதற்குமுழுமுதல் காரணமாக இருந்தது எனது படக்குழுவினர்தான். அவர்களுக்குஎன் மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும் தந்த மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.தற்போது படத்தின் 80% சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டபடப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தின் ட்ரைலர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளோம்" என்றார்.
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)