/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1024_0.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற பாடகர் திருமூர்த்தி. இவர் விக்ரம் படம் வெளிவந்ததில் இருந்து மக்களால் முனு முனுக்கப்படும் பாடலான பத்தல பத்தல பாடலை பாடிதன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, கமல் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதை பார்த்த கமல்ஹாசன் பாடகர் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் கமலிடம் பேசிய திருமூர்த்தி தான் இசைக்கலைஞராக வேண்டும் கூறினார். அவரின் விருப்பத்தை நிறைவேற்ற கமல் ஏ.ஆர் ரஹ்மானிடம் பேசினார். இதையடுத்து தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் பாடகர் திருமூர்த்தியை சேர்த்துக்கொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். இதனிடையே திருமூர்த்தி இசை கற்றுக் கொள்வதற்காக முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமூர்த்தியின் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தன் செல்போனில் படம் பிடித்த ஒருவர், இசையமைப்பாளர் இமானுக்கும், அனுப்பவே அவர் சீறு படத்தில் பாடலை பாடவைத்து பெருமைப்படுத்தினார். அதன்பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த திருமூர்த்தியை தற்போது கமல் சந்தித்து வாய்ப்பு கொடுத்துள்ளது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)