kaithi movie released russia

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'கைதி' திரைப்படம் ரஷ்ய மொழியில் உஸ்னிக்என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரஷ்யாவில் 121 நகரங்களில் சுமார் 297 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைபடத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment