Skip to main content

முடிவடையும் தருவாயில் சியான் விக்ரம் படம் 

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
vikram

 

 

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, தன் ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் விக்ரமுடன் இணைந்து  நடிக்கிறார்கள். படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா? - விக்ரம் பாடும் எழுச்சி பாடல்  

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
vikram

 

 

கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். 

 

"தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே"

 

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். "கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்" என ஜிப்ரான் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

தூம் பட பாணியில் விக்ரம்; மாஸ் காட்டும் கடாரம் கொண்டான் டீஸர்...

Published on 15/01/2019 | Edited on 15/01/2019

 

fthrsd

 

கமல்ஹாசன் தந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம், அக்சரா ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். முழுக்கமுழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.