Skip to main content

"முகத்தில் ஒரு பக்கம் செயல்படவில்லை" - பிரபல பாடகரின் அறிவிப்பால் அதிர்ந்து போன ரசிகர்கள்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Justin Bieber cancels justice world tour shows after half face left paralysed virus

 

உலகம் முழுவதும் தனது பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ஜஸ்டின் பீபர். இவர் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஜஸ்டிஸ் உலக சுற்றுலா(justice world tour) என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.  அதன் முதல் நிகழ்ச்சியாக கனடாவில்  நேற்று(10.6.2022) நடைபெறுவதாக இருந்தது. 

 

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாடகர் ஜஸ்டின் பீபர் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜஸ்டிஸ் உலக சுற்றுலா(justice world tour) நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என முதக்கத்தில் ஒரு கண் துடிப்பு இல்லாமல் உள்ளது.  என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. என்னுடைய முகத்தில் ஒருபக்கம் முற்றிலும் செயலிழந்துள்ளது. அதனால்தான் அடுத்தடுத்து நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு என்னால் உடல் ரீதியாக செயல்பட முடியாமல் போனதை தெரிவித்து கொள்கிறேன். இந்த பாதிப்புக்கான சில சிகிச்சைகளை செய்து வருகிறேன். விரைவில் குணமடைந்து உங்களை காண வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி கலந்த வருத்தத்துடன் இருக்கும் ஏராளமான ரசிகர்கள் ஜஸ்டின் பீபர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்

 

பாடகர் ஜஸ்டின் பீபருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த பாதிப்பு ஏற்பட்டால் காதுகளின் பக்கத்தில்  உள்ள முக நரம்பு பாதித்து  முகத்தில் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்