Skip to main content

"நம் நாட்டில் உணவு என்பதே சிலருக்கு ஆடம்பரம்" - கோவா சர்வதேச திரைப்படவிழாவில் ஸ்வீட் பிரியாணி இயக்குநர் பேச்சு!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

jeyachandra hashmi

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி குறும்படமும் திரையிடப்பட்டன. 

 

ad

 

திரையிடல் நிகழ்வுக்கு பிறகு இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மியும் ஸ்வீட் பிரியாணி நாயகன் ப்ராங்க்ஸ்டர் ஆர்.ஜே. சரித்திரனும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அந்த சந்திப்பில் படம் குறித்து இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி பேசுகையில், "நான் பார்த்த பல விஷயங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.  ஒரு தமிழ் பத்திரிகையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை படித்தேன். அபார்ட்மெண்டில் தனிமையில் வசிக்கும் முதியவர் ஒருவர், தன் வீட்டிற்கு கொரியர் டெலிவரி செய்ய வரும் பையனை சிறிது நேரம் இருந்து தன்னிடம் பேசுமாறு கூறுவார். அதற்கு அவர் பணம் கொடுக்கவும் தயாராக இருப்பார். அதை படிக்கும்போதே எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. இந்தக் கதைக்காக கொரியர் டெலிவரியை உணவு டெலிவரி என்று மாற்றினேன். இதை படமாக எடுக்கப்போகிறேன் என்ற விஷயத்தை அந்த எழுத்தாளரிடம் செல்வதற்காக  தொடர்பு கொண்டபோது, ஆந்தாலஜி படத்திற்காக இந்தக் கதையை படமாக்க சமீபத்தில்தான் ஒருவர் அனுமதி பெற்றதாக கூறினார். அவர்கள் அந்தக் கதையை படமாக்கியும்விட்டனர். அதனால் உணவு டெலிவரி பாயின் ஒருநாளை மையமாக வைத்து படமாக்க முடிவெடுத்தோம். நம் நாட்டில் ஆடம்பர உணவு என்பது பலருக்கு சாதாரண விஷயம். அதே நேரத்தில் உணவு என்பதே சிலருக்கு ஆடம்பரமான விஷயம். இந்த இரு வேறான விஷயங்களை ஒன்றாக்கி ஒரு கதை எழுதினேன். நாயகன் மாரிமுத்து பையில் உணவை எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் பைக்கில் பயணம் செய்வான். அவன் நாள் முழுவதும் பசியோடு சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை சந்திப்பான். ஆனால், அவனால் அந்தக் குடும்பத்திற்கு உதவ முடியாது. இதுதான் படத்தின் மையம்" எனக் கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேசத் திரைப்பட விழா - ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிராக போரட்டம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

protest against  The Kerala Story screening in iffi

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல மொழி படங்கள் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டது. அந்த வகையில் சுதிப்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், மற்றும் ஓவியர் அர்ச்சனா ஆகியோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தை கேலி செய்யும் மீம்ஸ் மற்றும் படத்தில் கூறப்பட்ட பல விஷயங்களை மறுக்கும் தரவுகள் அடங்கிய ஆவணங்களையும் கையில் வைத்திருந்தனர்.

 

அதோடு இயக்குநர் சுதிப்தோ சென்னிடம், இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அவர், “நீங்கள் படம் பார்த்தீர்களா? படம் பார்க்காதவரை அதைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்”என்றார். இதனால் போரட்டதில் ஈடுபட்ட இருவரையும் பனாஜி போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் செல்போன்களையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்து, பின்பு 1 மணி நேரம் கழித்து விடுவித்தனர். 
 

 

 

Next Story

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கடக் சிங்’ ட்ரைலர்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Kadak Singh Trailer released in goa international film festival

 

54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நேற்று (20.11.2023) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது. நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. 

 

இந்த நிலையில் பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’படத்தின் ட்ரைலர் இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில் பார்வதி திருவோது மற்றும் முன்னணி கதாபத்திரத்தில் சஞ்சனா சாங்கியுடன் பங்களாதேஷி நடிகர், ஜெயா அஹ்சான் நடிகின்றனர். முக்கிய துணை பாத்திரங்களில் பரேஷ் பாஹூஜா மற்றும் வருண் புத்ததேவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து ஒரு விஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த திரைப்படம் 8 டிசம்பர் 2023 அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. .