![Jai Bhim Teaser](http://image.nakkheeran.in/cdn/farfuture/kw1_eOrc1Z30pvAqcbnHGMmQyfh1vee8CPWCfyvXA00/1634292973/sites/default/files/inline-images/99_13.jpg)
2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/HZtTjV95HkZr1WPcpenQhq2uqxV863aQmrA71QpRnS4/1634293070/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_103.jpg)
இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரைப் படக்குழு இன்று (15.10.2021) வெளியிட்டுள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா, "உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும் உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய் பீம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த டீசர், வெளியான சில நிமிடங்களிலேயே யூடியூப் தளத்தில் 5 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.