Skip to main content

'சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்' - விமல் பட இயக்குனர் பேச்சு 

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
iemi

 

 

 

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. விமல் நாயகனாகவும், ஆஷ்னா சவேரி நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் ஆனந்த ராஜ்,சிங்கம்புலி,மன்சூரலிகான்,லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா, பூர்ணா ஆகியோருடன் முதல் முறையாக ஆங்கில நடிகை 'மியா ராய்' கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.முகேஷ். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் இப்படம் குறித்து பேசும்போது... "இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்