/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/604_62.jpg)
‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இப்படத்தை தொடர்ந்து பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார்.‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது, 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் பிரான்ஸில்நடைபெற்று வரும் உலக புகழ் பெற்ற கேன்ஸ்திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)