Skip to main content

இந்தியன் - 2 படப்பிடிப்பு கைவிடப்பட்டதா?

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
indian-2


ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இரு வேடத்தில் நடித்து 1996ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளியானது. இந்த படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. தற்போது இந்த படத்தின் 2 பாகத்தை கமலஹாசன் - காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து ஷங்கர் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியன் - 2 படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர்.
 

கடந்த மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழு படப்பிடிப்பை தள்ளி வைத்தது. இதனை தொடர்ந்து நேற்று சமூக வலைதளங்களில் இந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இதனை படக்குழு மறுத்துள்ளது. இந்நிலையில் இந்தியன் - 2 படப்பிடிப்பு வருகிற 18ந்த் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். இதற்காக பொள்ளாச்சியில்  அரங்கம் அமைத்துள்ளனர். கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சிம்பு கௌரவ தோற்றத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்