Anurag Kashyap

Advertisment

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி இருவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தயாரிப்பாளர் மது வர்மா மந்தேனா, விகாஸ் பஹ்லுக்கு சொந்தமான இடங்கள், தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபேண்டம் ஃபிலிம்ஸிலும் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="47f3477f-6ebf-4302-86c1-3295fb216bc5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_11.png" />

மொத்தம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இச்சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சோதனையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.