Skip to main content

'விக்ரம்' திரைப்படம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

High Court has ordered a ban Vikram movie illegal piracy internet

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியான வழக்கு தொடர்படுவதும், பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி படம் இணையத்தில் வெளியாவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்