/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/79_17.jpg)
அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பெல்லி சூப்பலு’ என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 22ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் நேற்று (12.10.2021) வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர், ஒரே இரவில் நான்கு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)