Skip to main content

’ஜென்டில்மேன் 2' ; மேலும் ஒரு பிரபலத்தை புக் செய்த படக்குழு

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

‘Gentleman 2’; film crew who booked a celebrity

 

1993-ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இயக்குநர் சங்கரின் முதல் படமான இப்படத்தில் கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். கே.டி. குஞ்சுமோன் பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக 'ஜென்டில்மேன் 2' படத்தைத் தயாரிக்கவுள்ளார். நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்க கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

 

இந்நிலையில் ’ஜென்டில்மேன் 2' படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படத்தின் கலை இயக்குநராகப் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தோட்டா தரணியோடு இணைந்து அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளார். இதனைப் படத்தின் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்து பாடல்கள்" - வைரமுத்து

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

vairamuthu about gentleman 2 songs

 

1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். ஆஸ்கர் வென்ற கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், வைரமுத்து அனைத்து பாடல்களுக்கும் வரிகள் எழுதியுள்ளார். 

 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (09.10.2023) சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது. தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர்.குமார் ராஜேந்திரன், வைரமுத்து ஆகியோர் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். பின்பு மூன்று பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைரமுத்து, "நிகழ் கால தனலடிக்கிற, எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட ஒரு தகவல் சொல்லக் கூடிய படமாக இந்தப் படம் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம். எல்லாவற்றையும் விட நான் மிகவும் ரசித்தது கீரவாணியின் இசை. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி, இந்த படத்தில் 7 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்த 7 பாடல்களையும் எழுதக் கூடிய வாய்ப்பை குஞ்சுமோன் எனக்கு வழங்கியிருக்கிறார். 

 

அத்தனை பாடல்களும் என் பாடல்கள் என்று சொல்வதை விட தமிழின் பாடல்கள், தமிழ் கொஞ்சுகிற பாடல்கள், தமிழை உயர்த்திப் பிடிக்கிற பாடல்கள். குத்துப் பாட்டுகளுக்கு மத்தியில் முத்துப் பாடல்கள் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன" என்றார்.   

 


 

Next Story

"கீரவாணிக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பது தமிழர்களுக்கான அங்கீகாரம்" - எல். முருகன்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

l murugan about keeravaani

 

1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க இசையமைப்பாளராக ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்கிறார். வைரமுத்து பாடலாசிரியராகப் பணியாற்றுகிறார். 

 

இந்நிலையில் இப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் கீரவாணிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாகவும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் நடத்தியிருக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

அப்போது கீரவாணியைப் பற்றி பேசிய எல்.முருகன், "இசையமைப்பாளர் கீரவாணி கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆயிரக்கணக்கான சினிமாக்களில் இசையமைத்துள்ளார். அவருடைய 'அழகன்...' என்ற பாடலை பல முறை நான் விமானத்தில் வரும் போது கேட்டுள்ளேன். அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது, காலதாமதமாக பார்க்கிறேன். அப்போதே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். உலக அளவில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம். அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு வரலாற்று சாதனையை செய்திருக்கிறார். 

 

தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதற்கு பல படங்களை உதாரணத்துக்கு சொல்லலாம். ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் மட்டும் தான் பான் இந்தியா படமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாக்கள் சர்வதேச அளவிற்கு உயர்ந்துள்ளது" என்றார்.