Skip to main content

‘நவராசா'-க்கு சூர்யாதான் எனது முதல் தேர்வாக இருந்தார்" - கௌதம் வாசுதேவ் மேனன்

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

gdsbdsbs

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் விரைவில் வெளிவரவிருக்கும் 'நெட்ஃப்ளிக்ஸ்' ஆந்தாலஜி திரைப்படமான ‘நவரசா’ திரைப்படத்தில் ‘கிடார் கம்பியின் மேலே நின்று’ பகுதியை இயக்கியுள்ளார். ‘காதல்’ உணர்வினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கமல் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், நேத்ரா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரயகா ரோஸ் மார்டினும் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா மற்றும் ப்ரயகா ரோஸ் மார்டின் குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியபோது....

 

bdbfbxbv

 

"இந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யாதான் எனது முதல் தேர்வாக இருந்தார். இப்பாத்திரத்தில் வேறு யாரும் நடிப்பதை நான் கற்பனை கூட செய்யவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற மிக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். இந்தப்படம் அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. திரையிலும் அது மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம் போல வருகிறாள். அவளின் குணம்  நம் மனதில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையிலானது. ப்ரயகா ரோஸ் மார்ட்டின் இந்தக் கதாபாத்திரத்தை மிக அற்புதமான முறையில் நடித்துள்ளார். அவர் பேசும் விதம், தோற்றமளிக்கும் விதம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும் உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாபாத்திரத்தின் மனதோடு இணைந்தவை. அவர் இசையைப் பற்றி பேசிய விதமும் கதாபாத்திரத்துடன் இணைந்துகொண்ட விதமும் மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதைக் காண ஆவலுடன் உள்ளேன்.

 

vbdbdsbsx

 

தமிழ் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், 'நெட்ஃப்ளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ்  இணைந்து தயாரித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்